இலங்கை கவச வாகன படையணியின் புதிய படைத்தளபதி கடமையேற்பு

மேஜர் ஜெனரல் டி.கே.ஆர்.என். சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2026 மே 11 அன்று இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்தில் படையணியின் 17 வது படைத்தளபதியாக பொறுப்பேற்றார்.

வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அதன்பிறகு, வீரமரணம் அடைந்த போர் வீரர்களைக் கௌரவிக்கும் விதமாக, படையணியன் ஸ்தாபகத் தந்தையான ஜெனரல் தேசமான்ய டி.எஸ். அட்டிகல்ல (மறைந்த) எல்வீஓ ஐடிசி பீஎஸ்சீ அவர்களின் சிலைக்கு அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்பட்ட படைத்தளபதி படையணி தலைமையக கழகத்தில் உரையாற்றியதோடு, அவ்விழாவைக் குறிக்கும் வகையில் முகாம் வளாகத்தில் ஒரு மாங்கன்று நாட்டினார்.

அனைத்துத் நிலையினருக்கான தேநீர் விருந்துடன் அன்றைய விழாக்கள் நிறைவடைந்தன. இந் நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.