7th August 2025
இலங்கை இராணுவம் ரஷ்ய-இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாய பயிற்சியின் மூன்றாவது திட்டமிடல் மாநாட்டை ரஷ்ய இராணுவ பிரதிநிதிகளுடன் 2025 ஓகஸ்ட் 05, அன்று காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தியது.
வரவிருக்கும் இராணுவப் கூட்டு பயிற்சிக்கான முக்கியமான நிர்வாக மற்றும் வழங்கல் விடயங்களை உறுதி செய்வதில் இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. இரு தரப்பினரும் உற்பத்தி ரீதியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர், நடவடிக்கையின் அனைத்து அம்சங்களும் கவனமாக ஒழுங்கமைக்கப்படுவதை உறுதி செய்தனர். பரஸ்பர மரியாதை மற்றும் பாராட்டுக்கான அடையாளமாக நினைவுப் பரிசுகள் பரிமாறிகொள்ளப்பட்டதுடன் நிகழ்வு நிறைவடைந்தது.