29th June 2025
306 சி சிங்க கழகத்துடன் இணைந்து போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம் 2025 மே 27 ம் திகதியன்று கண்டி இராணுவ அடிப்படை மருத்துவமனையில் அங்வீனமுற்றோர் மற்றும் சேவையில் உள்ள இராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தது. இந்த முயற்சி மத்திய மாகாணத்தில் வசிக்கும் இராணுவ வீரர்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரனி ரொட்ரிகோ ஆகியோருடன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். வருகை தந்த இராணுவத் தளபதியை போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.
விஜயத்தின் போது, தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோரால் அடையாளமாக 27 சக்கர நாற்காலிகள் மற்றும் 240 சோடி ஊன்றுகோல்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், ஊனமுற்ற வீரர்கள், ஓய்வுபெற்ற பணியாளர்கள், பராமரிப்பில் உள்ள படையினர் மற்றும் தற்போது மருத்துவ பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 2,500 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இந்த மருத்துவ முகாம் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் மருத்துவ ஆலோசனைகள், செயற்கை உறுப்பு பராமரிப்பு, தோல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், மனநல ஆலோசனை மற்றும் ஊட்டச்சத்து வழிகாட்டுதல் ஆகியவை இடம்பெற்றன.
மருத்துவ முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பு, இராணுவத் தளபதி, அஸ்கிரி பீடத்தின் பிரதம பீடாதிபதி வண. வரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பக்கானந்த ஞானரதனபிதான மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.