2025 பெப்ரவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 'தூய இலங்கை' திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட ‘1000 பாடசாலைகள் புனரமைக்கும் திட்டத்தின்' ஒரு பகுதியாக 500 பாடசாலைகளின் புனரமைப்பு பணிகளை இலங்கை இராணுவம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த பாரிய திட்டம் கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதையும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவது நோக்கமாகும்.
திட்டத்தின் ஒரு பகுதியாக, சுமார் 5,500 உடைந்த மேசை கதிரைகள் சீரமைக்கப்பட்டன. மேலும் இராணுவத்தினரால் கிட்டத்தட்ட 300 பாடசாலை கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கூரைகள் பழுதுபார்க்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு, பாடசாலைகளின் சேதமடைந்த வேலிகள் பழுதுபார்க்கப்பட்டன, பாடசாலைகளுக்கான பாதைகள் புனரமைக்கப்பட்டன.
உள்ளூர்வாசிகள், பாடசாலை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவால் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இலங்கை இராணுவத்தின் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் இந்த திட்டத்தின் நிறைவை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்தது. நாட்டின் கல்வி வசதிகளை மேம்படுத்துவதில் இது ஒரு குறிப்பிடத்த விடயமாகும்.