இலங்கை இராணுவத்தினால் சுங்க நடைமுறைகள் தொடர்பான விரிவுரை

இராணுவ கொள்முதல் தொடர்பான சுங்க நடைமுறைகள் குறித்த சிறப்பு விரிவுரை இராணுவ தலைமையகத்தில் திட்ட பணிப்பகத்தால் 2025 செப்டம்பர் 30 ஆம் திகதி வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

சுங்க பிரதி பணிப்பாளர் திரு.மிஹிராஜ் அப்துல்லா இந்த விரிவுரையை நிகழ்த்தினார், மேலும் இராணுவத்தின் கொள்முதல் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதற்கு அவசியமான சுங்க விதிமுறைகள் மற்றும் நடைமுறை அம்சங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

150 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விரிவுரையில் பங்கேற்றனர்.