2nd October 2025
கோட்டை புனித தோமையர் தேவாலயத்தில், கொழும்பு மறைமாவட்ட என்டன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றதுடன் பல முக்கிய மதகுருமார்களும் இதில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் எதிர்வரும் 76 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு (ஒக்டோபர் 10) பல மத அனுசரிப்புகளின் ஒரு பகுதியாக ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டன.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் , இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களுடன் இணைந்து இராணுவக் கிறிஸ்தவ சங்கத்தின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.
பின்னர், இராணுவக் கிறிஸ்தவ சங்கத்தின் செயலாளர் வரவேற்பு உரையை நிகழ்த்தியதுடன், பங்கேற்பாளர்களுக்கு நிகழ்வின் கருப்பொருளை எடுத்துரைத்தார். இலங்கை பாப்டிஸ்ட் தேவாலயத்தின் மரியாதைக்குரிய அருட் தந்தை நிரோஷன் டி மெல் தலைமையில், வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கான நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் பி.ஏ.டி.ஆர்.ஏ.சி. விஜயசேகர ஆர்எஸ்பீ சிடீஎப்-என்டியுஎஸ்ஏசிஜிஎஸ்சிீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் மதகுருமார்கள் கலந்து கொண்டனர்.