இலங்கை இராணுவத்தின் 68வது பதவி நிலை பிரதானி கடமை பொறுப்பேற்பு

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் 2026 ஏப்ரல் 02 ஆம் திகதி இராணுவத்தில் இரண்டாவது மிக உயர்ந்த பதவியாகக் கருதப்படும், இலங்கை இராணுவத்தின் 68 வது பதவி நிலை பிரதானியாக பதவியேற்றார்.

பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டதிட்டார். பின்னர் புதிய கடமைக்கான ஆசீர்வாதங்களைப் பெறும் வகையில் மத அசிர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றன.

இப்பதவியை ஏற்கும் முன்னர் சிரேஷ்ட அதிகாரி பிரதிப் பதவி நிலை பிரதானியாகவும் பதில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியாகவும் பணியாற்றியிருந்தார். நியமிக்கப்பட்ட புதிய பதவி நிலைப் பிரதானிக்கு தங்கள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக, முதன்மை பணிநிலை அதிகாரிகள், ஆலோசகர்கள், பணிப்பாளர் நாயகங்கள், பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.