இலங்கை இராணுவத்தால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகள் நன்கொடை

இலங்கை இராணுவ நலன்புரி பணிப்பகம் 2025 ஆகஸ்ட் 12 அன்று இராணுவத்தில் பணியாற்றும் இராணுவ வீரர்களின் பிள்ளைகளான அரசு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குவதற்காக ஒரு சிறப்பு நன்கொடை திட்டத்தை நடத்தியது. இந்த முயற்சி 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத் தேர்வை வெற்றிகரமாக முடித்த பின்னர் பல்கலைக்கழக சேர்க்கை பெற்ற முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களை இலக்காகக் கொண்டது.

இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். நலன்புரி பணிப்பக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜீ.சீ.வீ பெர்னாண்டோ என்டிசி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் அவரை அன்புடன் வரவேற்றனர்.

இந்த நிகழ்வின் போது இராணுவத் தளபதி, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ ஆகியோருடன் இணைந்து மொத்தம் 57 மடிக்கணினிகளை (HP Core i5 – 14th Gen) மாணவர்களுக்கு வழங்கினார்.

இந்த நலத்திட்ட முயற்சி, சேவை செய்யும் உறுப்பினர்களின் பிள்ளைகளின் கல்வி தேவைகளை ஆதரிப்பதையும் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க தேவையான தொழில்நுட்ப வளங்களை வழங்குவதனையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.