இலங்கை இராணுவம் 76 ஆண்டு சேவையை பெருமையுடன் கொண்டாடுகிறது

இலங்கை இராணுவம் தனது 76 வது ஆண்டு நிறைவை இன்று (ஒக்டோபர் 10) பனாகொடை இராணுவ முகாமில் கொண்டாடியது. இது ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக தேசத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் சிறப்புமிக்க சேவையை நினைவுகூறுகிறது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார்.

இராணுவ சம்பிரதாயங்களுக்கு இணங்க, பிரதம விருந்தினரை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் டபிள்யூ.கே.எஸ்.பீ.எம்.ஆர்.ஏ.பி. தொடம்வெல பீஎஸ்சீ அவர்களால் மரியாதையுடன் வரவேற்றார். பின்னர் இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

இராணுவ மரியாதைகளைப் பெற்றவுடன், இராணுவத் தளபதி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களுடன் இலங்கை இலேசாயுத காலாட் படையணி அணிவகுப்பு மைதான நுழைவாயிலுக்கு வருகை தந்தார். அவரை பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், இராணுவத் தளபதி இராணுவக் கொடியை ஏற்றி அன்றைய நிகழ்வுகளை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, இராணுவப் பாடல் பாடப்பட்டதுடன், பங்கேற்பாளர்கள் அனைவரும் வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்த ஆண்டு இராணுவ தின அணிவகுப்புக்கு பொது பணி பணிப்பாளர் நாயகமும் இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் தலைமை தாங்கினார். விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.ஏ.டி.சி.ஆர். கன்னங்கரா ஆர்எஸ்பீ என்டிசீ அணிவகுப்பில் இரண்டாம் தளபதியாகப் பணியாற்றினார். இந்த அணிவகுப்பில் 24 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 75 அதிகாரிகள் மற்றும் 626 சிப்பாய்கள் சம்பிரதாய வண்ணங்களு குழுக்கலுடன் கலந்து கொண்டனர்.

இராணுவத் தளபதி அணிவகுப்பை மீளாய்வு செய்த பின்னர், இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க படையினர் மரியாதை செலுத்தினர். பின்னர் ஆறு சிப்பாய்களுக்கு அவர்களின் கடந்த ஆண்டின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் விதமாக இராணுவத் தளபதியின் பாராட்டுச் சின்னம் சூட்டப்பட்டது. தேசிய அவசரநிலைகளின் போது, பெரும்பாலும் தனிப்பட்ட ஆபத்தில் துணிச்சல், நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவைக்காக இந்த நபர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இராணுவத் தளபதி தனது உரையில், மேம்பட்ட தொழில்நுட்ப திறன்கள் மற்றும் நவீன போர் திறன்களைக் கொண்ட தொழில்முறை வீரர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி, எதிர்கால வளர்ச்சிக்கு சிப்பாய்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை வலியுறுத்தினார். "தலைமைத்துவம் புரிவோம்" என்ற வழிகாட்டும் குறிக்கோளின் கீழ், இராணுவம் சிறந்து விளங்குதல், தொழில்முறை மற்றும் வலுவான தலைமைத்துவத்தால் வரையறுக்கப்பட்ட எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் படையாக மாற உறுதிபூண்டுள்ளது என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து முன்னாள் இராணுவத் தளபதிகள், காயமடைந்த மற்றும் உயிர்நீத்த போர்வீரர்கள், சேவையில் உள்ள அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாராட்டினார். நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து நிலையினரும் தங்கள் அர்ப்பணிப்புமிக்க சேவையைத் தொடர ஊக்குவித்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் இராணுவத் தளபதிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அவர்களது துணைவர்கள், அதிகாரிகள், முன்னாள் இராணுவத் தலைமையக சார்ஜன் மேஜர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.