இலங்கை இராணுவ வைத்திய படையணியின் புதிய படைத் தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ வைத்திய படையணியின் 15 வது படைத் தளபதியாக 2025 ஜூன் 27, அன்று இலங்கை இராணுவ வைத்திய படையணி தலைமையத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

வருகை தந்த அவருக்கு படையணி அணிவகுப்பு மைதானத்தில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், அவர் மரக்கன்று நாட்டியதை தொடர்ந்து படையினருக்கு உரையாற்றினார்.

அன்றைய தினத்தை நினைவுகூரும் வகையில், அவர் குழு படம் எடுத்துகொண்டதுடன் அனைத்து நிலையினருடன் தேநீர் விருந்திலும் கலந்து கொண்டார்.