1st July 2025
இலங்கை இராணுவ வைத்திய படையணியின் வெளிசெல்லும் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுக்கு இலங்கை இராணுவ வைத்திய படையணி வளாகத்தில் 2025 ஜூன் 24, அன்று பிரியாவிடை வழங்கப்பட்டது.
அவருக்கு இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், அவர் இலங்கை இராணுவ வைத்திய படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றுகையில் தனது பதவிக்காலத்தில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறைக்கு நன்றி தெரிவித்தார்.
அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்தில் சிரேஷ்ட அதிகாரி அனைத்து படையினருடனும் உரையாடினார். அன்றைய நிகழ்வுகள் இரவு விருந்துடன் நிறைவடைந்தன.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.