இலங்கை இராணுவ வைத்திய படை நிலை-2 வைத்தியசாலைக்கு தென் சூடான் ஐ.நா சபை தூதுக்குழுவின் பதவி நிலை பிரதானி பாராட்டு

தென் சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தூதுக்குழுவின் பதவி நிலை பிரதானி திருமதி. லெடா லிமான் 2026 மே 07 ஆம் திகதி போரில் உள்ள தென் சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தூதுக்குழுவில் உள்ள இலங்கை இராணுவ வைத்திய படை நிலை-2 வைத்தியசாலைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.

இலங்கை படையின் தளபதி கேணல் டி.ஆர்.எஸ்.ஏ. ஜயமன்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களால் அவர் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

இந்த விஜயத்தின் போது, வைத்தியசாலையின் செயற்பாட்டுப் பணிகள் மற்றும் விரிவான மருத்துவ ஆதரவுத் திறன்களை எடுத்துரைக்கும் வகையில், மேஜர் எச்.பி.டி. கல்கொடல்ல யூஎஸ்பீ அவர்களால் ஒரு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், முக்கிய மருத்துவ மற்றும் ஆதரவுப் பிரிவுகள் உட்பட, மருத்துவமனை வளாகம் முழுவதும் தூதுக்குழுவினர் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர். பாராட்டுகளைத் தெரிவித்த பதவி நிலை பிரதானி, போரில் உள்ள ஐ.நா. பணியாளர்களுக்கு அத்தியாவசிய சுகாதார ஆதரவை வழங்குவதில், இலங்கை இராணுவ வைத்திய படை நிலை-2 வைத்தியசாலையின் பணயாளர்களின் தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டினார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவுப் பரிசில் வழங்கப்பட்டது.