இலங்கை இராணுவ தொண்டர் தொண்டர் படையணியில் படையணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி - 2025

இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் படையணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிகள் 2025 ஆகஸ்ட் 27, அன்று இலங்கை இராணுவ தொண்டர் படை ரெண்டெஸ்வஸ் கிரிக்கெட் மைதானத்தில் நிறைவடைந்தன. இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

2025 ஆகஸ்ட் 21, அன்று இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பல்வேறு பாதுகாப்புப் படைத் தலைமையகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து அணிகள் பங்கேற்றன.

பத்து ஓவர்கள் கொண்ட மென்பந்து இறுதிப் போட்டியில், 5 வது (தொ) இலங்கை சிங்க படையணி 106/8 என்ற இலக்கை நிர்ணயித்தது. சவாலை எதிர்கொண்டு, 17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி 9 ஓவர்களில் 107/4 என்ற இலக்கை அடைந்து சாம்பியன்ஷிப்பை வென்றது, 5 வது (தொ) இலங்கை சிங்க படையணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. பார்வையாளர்களின் உற்சாகமான ஆரவாரங்களுக்கு மத்தியில் தளபதி கிண்ணங்களை வழங்கினார்.

சிறப்பு விருது வென்றவர்களின் விபரம்:

• ஆட்ட வீரர் - கோப்ரல் டி.ஐ. லக்க்ஷித, 17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி

• தொடர் வீரர் - சார்ஜன் கேபீஜீஐயூகே ஜயலத் 5 வது (தொ) இலங்கை சிங்க படையணி

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வைக் கண்டுகளித்தனர்.