இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 61 வது தளபதியாக 2025 ஜூன் 26 அன்று தொண்டர் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.

வருகை தந்த புதிய தளபதியை இலங்கை இராணுவ தொண்டர் படையணி சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

இராணுவ சம்பிரதாய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் தளபதி மறைந்த கெப்டன் சாலிய அலதெனிய பீடப்ளியூவீ அவர்களின் நினைவிடத்தில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் புதிய இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதிக்கு இலங்கை பீரங்கி படையணி படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர், முகாம் வளாகத்தில் தளபதி ஒரு மரக்கன்றை நாட்டினார்.

தனது முதல் படையினருக்கான உரையின் போது, தனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்காக அனைத்துப் படையினருக்கும் தளபதி நன்றி தெரிவித்தார். பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட தொண்டர் படையணிக்கு சேவை செய்வதற்கான தனது அர்ப்பணிப்பை அவர் எடுத்துரைத்துடன் மேலும் வீரமரணம் அடைந்த தொண்டர் படையணி போர் வீரர்கள் மற்றும் போரில் காயமடைந்தவர்களின் தியாகங்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.