இலங்கை இராணுவ படகுப் போட்டி - 2025 நிறைவு

இலங்கை இராணுவத்தின் முதலாவது படகுப் போட்டி மற்றும் கயாக்கிங் சாம்பியன்ஷிப், 2025 ஆகஸ்ட் 24 முதல் 26 வரை தியவன்னா படகுப் போட்டி கல்லூரியில், 08 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 85 வீரர்களின் பங்கேற்புடன் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை இராணுவ படகோட்ட மற்றும் கயாக்கிங் குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் எம்.டி.ஐ. மகாலேகம் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இலங்கை சமிக்ஞை படையணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதுடன், இலங்கை இலேசாயுத காலாட் படையணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.