இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான சதுரங்க சாம்பியன்ஷிப் - 2025 வெற்றிகரமாக நிறைவு

இராணுவ சதுரங்கக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான சதுரங்க சாம்பியன்ஷிப் 2025, இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்தில் 2025 செப்டம்பர் 22 முதல் 26 வரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் 14 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 135 வீர வீராங்கனைகள் பங்கேற்றனர்.

நிறைவு விழாவில் பிரதம விருந்தினராக இராணுவ சதுரங்கக் குழுவின் தலைவரும் ஒழுக்க பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஆர். அபேசிங்க என்டிசீ அவர்கள் கலந்து கொண்டார்.

இந்தப் போட்டியில் திறந்த மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கான நிலையான, வேகப் போட்டிகள் மற்றும் குழுப் போட்டிகள் இடம்பெற்றன. இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அணி 245 புள்ளிகளுடன் அனைத்திலும் சாம்பியன்களாகத் தெரிவானது, அதே நேரத்தில் இலங்கை இராணுவ மருத்துவ படையணி 200 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இலங்கை கவச வாகன படையணி மற்றும் பொறியியல் சேவைகள் படையணி ஆகிய அணிகள் தலா 105 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டன.

வெற்றியாளர்கள் பின்வருமாறு:

• திறந்த நிலையான போட்டி: லெப்டினன் ஆர்.டி.ஏ.எம். சுரவீர (பொறியியல் சேவைகள் படையணி)

• பெண்கள் நிலையான போட்டி: லான்ஸ் கோப்ரல் ஐ.என்.டி. தசநாயக்க (இலங்கை இராணுவ பொலிஸ் படையணி)

• திறந்த வேகப் போட்டி: லான்ஸ் கோப்ரல் டி.என்.எஸ். டி சில்வா (இலங்கை இராணுவ மருத்துவ படையணி)

• திறந்த வேகப் போட்டி: கோப்ரல் டபிள்யூ.ஜீ.எச்.எஸ். ஆரியரத்ன (இலங்கை இராணுவ பொலிஸ் படையணி)

• திறந்த அணிகள் போட்டி: இலங்கை இராணுவ மருத்துவ படையணி

• பெண்கள் குழு போட்டி: இலங்கை இராணுவ பொலிஸ் படையணி