24th October 2025
இராணுவ ஸ்குவாஷ் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை இராணுவ படையணிகளுகு இடையிலான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2025, மத்தேகொடை இராணுவ முகாமில் 11 படையணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 185 ஆண் மற்றும் பெண் வீரர்களின் பங்கேற்புடன் 2025 ஒக்டோபர் 05 முதல் 15 வரை நடைபெற்றது.
இலங்கை கவச வாகன படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் டி.கே.ஆர்.என் சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
திறந்த ஆண்கள் சாம்பியன்ஷிப்பில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அணி வெற்றி பெற்றதுடன், கஜபா படையணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
திறந்த அதிகாரிகள் போட்டியில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி அணியின் கெப்டன் டபிள்யூ.பீ.வை. இரேசன் முதலிடத்தையும், இலங்கை பொறியியல் படையணி அணியின் மேஜர் எல்.ஈ.எஸ். லியனகமகே இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். திறந்த ஆண்கள் பிரிவில், கஜபா படையணியின் லான்ஸ் கோப்ரல் எஸ்.என். டேனியல் சாம்பியன் பட்டத்தையும், மகளிர் திறந்த பிரிவில் பெண் மாணவ அதிகாரி கே.எம். அபேரத்ன சாம்பியன் பட்டத்தையும் வென்றனர்.