30th October 2025
மின்பணியாளர், தட்சன் (கட்டிடம்) மற்றும் மேசன் (கொத்தனர்) ஆகியோருக்கான தேசிய தொழிற் தகைமை நிலை III சான்றிதழ்கள் வழங்கும் விழா, இலங்கை இராணுவ பொறியியல் பாடசாலை தளபதி கேணல் ஜே.ஏ.சி.எஸ். ஜகோட பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையில், 17 ஒக்டோபர் 2025 அன்று இலங்கை இராணுவ பொறியியல் பாடசாலையில் நடைபெற்றது.
மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. கே.ஏ. லலிததீர, பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் மேலும் இராணுவ தலைமை கள பொறியியலாளர் பிரிகேடியர் சி.டி. விக்ரமநாயக்க டப்ளியூவீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களும் கலந்து கொண்டார்.
பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மொத்தம் 83 சிப்பாய்கள் தங்கள் தொழிற் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக தொழிற் தகைமை சான்றிதழ்களைப் பெற்றனர்.
மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணையத்தின் பதிவு, அங்கீகாரம் மற்றும் கியூ.எம்.எஸ். பிரிவைச் சேர்ந்த திரு. மஞ்சுள விதானபத்திரண, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.