15th July 2025
மேஜர் ஜெனரல் பிஜீஎஸ் பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் 14வது படைத் தளபதியாக 2025 ஜூலை 11 ம் திகதி பொல்ஹெங்கொட படையணி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.
அன்றைய நிகழ்வுகள் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து மத ஆசீர்வாதங்கள், குழு புகைப்படம் எடுத்தல், மரக்கன்று நடுதல், படையினருக்கு உரை மற்றும் அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்து போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன, இது படையணியின் அனைத்து உறுப்பினர்களிடையே ஒற்றுமை மற்றும் தோழமையை எடுத்து காட்டுவதாகும். முகாம் வளாகத்தினை பார்வையிட்டதை தொடர்ந்து நிகழ்வு நிறைவுற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.