இலங்கை சிங்க படையணியில் மன ஆரோக்கியம் மற்றும் திருப்திகரமான வாழ்க்கை தொடர்பில் விரிவுரை

மன ஆரோக்கியம் மற்றும் திருப்திகரமான வாழ்க்கை தொடர்பான விரிவுரையை இலங்கை சிங்கப் படையணி 2025 ஜூலை 03, அன்று இலங்கை சிங்க படையணி வளாகத்தில் நடத்தியது.

இந்த அமர்வை இராணுவ தடுப்பு மருத்துவ மற்றும் மனநல பணிப்பகத்தின் பணிப்பாளரும் மனநல ஆலோசகருமான பிரிகேடியர் (வைத்தியர்) ஆர்எம்எம் மொனராகல யூஎஸ்பீ மற்றும் இராணுவ மனநலப் பிரிவைச் சேர்ந்த அவரது குழுவினர் நடத்தினர்.

நிகழ்ச்சியின் போது, பங்கேற்பாளர்களுக்கு மன ஆரோக்கியம் மற்றும் ஒரு இராணுவ நபராக திருப்திகரமான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை எவ்வாறு அடைவது என்பது குறித்து கற்பிக்கப்பட்டது. இந்த தகவல் விரிவுரையில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.