27th June 2025
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் அதன் 21 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பதுரலிய பாலிந்தநுவர பிரதேச செயலக அதிகாரிகளுக்கு ‘தூய இலங்கை’ திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை 2025 ஜூன் 23 ம் திகதியன்று நடத்தியது.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் எம்எச் விக்ரமாராச்சி மற்றும் கஜபா படையணியின் சாஜன் என்.எம்.என். குமாரரத்ன ஆகியோரால் விரிவுரைகள் நடத்தப்பட்டன. பாலிந்தநுவர பிரதேச செயலக உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் இந்த விரிவுரையில் பங்கேற்றனர்.