5th September 2025
நேற்று (04) இரவு 9.20 மணியளவில் தங்காலையில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து, ராவணன் நீர்வீழ்ச்சியின் 15 வது மைல் கல் மவுண்ட் 07 ஹோட்டலுக்கு அருகில், எல்ல-வெல்லவாய வீதியை விட்டு விலகி, பள்ளத்தாக்கில் வீழ்ந்த ஒரு துயர விபத்து ஏற்பட்டது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மீட்பு பணிகளில் உதவ படையினர் உடனடியாக அனுப்பப்பட்டனர்.
நேற்று இரவு தொடங்கிய மீட்பு பணியில் விஜயபாகு காலாட் படையணி, கெமுனு ஹேவா படையணி மற்றும் கொமாண்டோ படையணிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 200 இராணுவ வீரர்கள் பங்கேற்றனர். பேருந்து பல நூறு மீட்டர் பள்ளத்தில் நின்றதால், பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றுவது மிகவும் கடினமாக இருந்தது.
சிறப்பு கொமாண்டோ படையணியின் குழுக்கள், ராப்பெல்லிங் மற்றும் மேம்பட்ட மீட்பு நுட்பங்களைப் பயன்படுத்தி, ஆபத்தில் சிக்கிய பயணிகளை அடைந்து பாதுகாப்பாக மீட்டனர். மீட்கப்பட்ட நபர்கள் உடனடியாக அவசர ஊர்திகள் மூலம் அவசர மருத்துவ சிகிச்சைக்காக பதுளை, பண்டாரவலை மற்றும் தியத்தலாவை ஆகிய மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகளுக்கு இராணுவம், ஏனைய அவசர சேவைகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ மற்றும் 112 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பி.ஏ.டி.என்.கே புலத்சிங்கள ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோர் அந்தந்த படையணிகளின் கட்டளை அதிகாரிகளுடன் இணைந்து இந்த நடவடிக்கையை உன்னிப்பாகக் மேற்பார்வையிட்டனர்.