ஓசோன் மண்டல பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தூய இலங்கை திட்டத்திக்கு இணங்க 2025 செப்டம்பர் 16, அன்று இராணுவத்தால் நாடு முழுவதும் தொடர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் இராணுவத் தலைமையகத்திற்கு முன்னால் காணப்படும் “துரு மிதுரு நவ ரடக்” பெயர் பலகைக்கு அருகில் 2025 செப்டம்பர் 16 அன்று ஒரு வென்சந்தன மரகன்றை நாட்டியதுடன் மேலும் நாடு முழுவதும் உள்ள இராணுவ முகாம்களில் 5000 மர கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
மொண்ட்ரீயல் நெறிமுறை, ஓசோன் மண்டலம் எவ்வாறு சேதமடைகிறது மற்றும் மனித உயிர்வாழ்விற்கான அதன் அவசியம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் அனைத்து முகாம்களிலும் ஒரு மணித்தியால தெளிவூட்டும் விரிவுரை நடத்தப்பட்டது. இதன் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் ஓசோன் மண்டலத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பாக இராணுவத்தினருக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
மேலும், அனைத்து முகாம்களிலும் எரிபொருள் மூலம் இயங்கும் இயந்திரங்களின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் வாயு பரவலை குறைப்பதற்கும், முகாம்களில் பயன்படுத்தப்படும் அனைத்து ஏர் கண்டிஷனிங் மற்றும் குளிர்பதன அமைப்புகளையும் சோதிப்பதன் மூலம் பசுமை இல்ல வாயு மண்டல பாதிப்பை தடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.