சிவனொளிபாதமலையின் கட்டுமானத் திட்டம், அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்புகள் மற்றும் பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணங்க, பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் கட்டுமானப் பணிகள் நடைப்பெற்று வருகின்றது.
300 மிமீ பக்கச்சுவர் முழுமையாக நிறைவடைந்துள்ளதுடன், 500 மிமீ சுவரின் கட்டுமானம் 2025 டிசம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி தோராயமாக 90% நிறைவடைந்துள்ளது. பிரதான தடுப்புச் சுவர் தற்போது கட்டுமானத்தில் உள்ளது, சுமார் 65% பணிகள் நிறைவடைந்துள்ளன. படிகட்டின் பாதுகாப்பு கைவேலி தோராயமாக 70% வரை நிறைவடைந்துள்ளது.
மேலும், அசாதாரண நில அமைப்பு காரணமாக கட்டுமானப் பகுதிக்கு பொருட்களை கொண்டு செல்வது கடினமானது. மேலும் சிமெந்து பொருட்களை கொண்டு செல்வதற்கு கடுமையான முயற்சி தேவைப்படுகிறது. இது சம்பந்தமாக, இலங்கை இராணுவ படையினர் கட்டுமானப் பகுதிக்கு பொருட்களை கொண்டு செல்ல மதிப்புமிக்க ஆதரவை வழங்கி வருகின்றனர்.
தற்போது, தேவையான அனைத்து பொருட்களும் கட்டுமான இடத்திற்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொறியியல் சேவைகள் படையணி 2026 ஜனவரி 05 ஆம் திகதிக்குள் இந்த திட்டத்தை நிறைவுசெய்ய தீர்மாணித்துள்ளது.