2025 டிசம்பர் 04 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை அடிப்படையாகக் கொண்டு, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலுடன் தூய இலங்கை திட்டத்தின் கீழ், சிவனொளிபாதமலை தளத்தை பொலித்தீன்/பிளாஸ்டிக் இல்லாத தூய பிரதேசமாக பராமரிக்க தொடர்ச்சியான திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டம் இரண்டு கட்டங்களாக செயற்படுத்தப்படுவதுடன், இதன் முதல் திட்டம் 2025 நவம்பர் 25 ஆம் திகதி சிவனொளிபாதமலை உடமலுவைச் சுற்றியுள்ள பகுதியில் 50 இராணுவ வீரர்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தில் பிளாஸ்டிக் இல்லாததாக இருப்பதை உறுதி செய்வதற்கும், சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பு சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதற்கும் அரச மற்றும் அரச சாரா நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் கட்டம், சிவனொளிபாதமலைக்குச் செல்லும் வீதிகளை உள்ளடக்கி 2025 நவம்பர் 29 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.