சிவனொளிபாதமலை கட்டுமானத் திட்டம் முன்னேற்றம்

அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்புகள் மற்றும் பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணங்க, பொறியியல் பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், சிவனொளிபாதமலை கட்டுமானத் திட்டம் சீராக முன்னேறி வருகிறது. 300 மீட்டர் சுவர் முழுமையாக நிறைவடைந்துள்ளதுடன், 500 மீட்டர் சுவரின் கட்டுமானம் சுமார் 65% நிறைவடைந்துள்ளது. பிரதான 8 அடி சுவரின் பணிகள் தற்போது நடைபெற்று வருவதுடன், சுமார் 20% நிறைவடைந்துள்ளது.

தளத்திற்கு பொருட்கள் சரியான நேரத்தில் கிடைப்பதால், பொறியியல் சேவைகள் படையணி, ஏனைய படையணிகளுடன் இணைந்து, 2026 ஜனவரி 1 ஆம் திகதிக்கு முன்பு இந்த திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.