சீரற்ற காலநிலைக்கு பின்னர் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் இலங்கை இராணுவம்

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்ட நாட்டின் பல பகுதிகளில் இலங்கை இராணுவம் விரிவான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தற்போது, சேதமடைந்த பல இடங்களுக்கு சென்று தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுப்பது, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அன்றாட வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதில் அவர்களின் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படுகின்றது.

இலங்கை இராணுவ பொறியியல் படையணி, நாடு முழுவதும் பல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கனரக இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை அனுப்பியுள்ளது. 2025 நவம்பர் 29 முதல் டிசம்பர் 3 வரை, பொறியியல் படையணி படையினர் நிலச்சரிவுகளை அகற்றுதல், சேதமடைந்த வீதிகளை சீர்செய்தல் மற்றும் அனர்த்ததில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதில் முக்கிய ஆதரவை வழங்குகின்றனர்.