22nd September 2025
அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் ‘தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி’ பாடநெறி –61 போர்ப் பயிற்சிப் பாடசாலையில் 2025 செப்டம்பர் 16, அன்று சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் நிறைவடைந்தது.
இலங்கை இராணுவத்தின் பல்வேறு படையணிகளைச் சேர்ந்த 73 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் போர்ப் பயிற்சிப் பாடசாலையில் ஒரு மாத கால பாடநெறியில் கலந்து கொண்டனர். 9வது கெமுனு ஹேவா படையணியின் லான்ஸ் கோப்ரல் டிஎம்எல்எஸ் குணரத்ன இப்பாடநெறியின் சிறந்த மாணவருக்கான விருதைப் பெற்றார்.
சான்றிதழ் வழங்கும் விழாவில் போர்ப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ஏகேசீஎஸ் டி சில்வா ஆர்ஸ்பீ என்டிசீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிறைவுரை உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் தலைமை பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.