19th July 2025
அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் ‘தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி’ பாடநெறி – 60, போர்ப் பயிற்சிப் பாடசாலையில் 2025 ஜூலை 17 ஆம் திகதி நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.
இலங்கை இராணுவத்தின் பல்வேறு படையணிகளைச் சேர்ந்த 87 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் போர்ப் பயிற்சிப் பாடசாலையில் ஒரு மாதம் தங்கியிருந்து பாடநெறியில் கலந்து கொண்டனர். 4 வது விஷேட படையணியின் கோப்ரல் டி.எம்.பீ.எம். திசாநாயக்க இப்பாடநெறியின் சிறந்த மாணவருக்கான விருதைப் பெற்றார்.
சான்றிதழ் வழங்கும் விழாவில் போர்ப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் எம்.பீ.எஸ்.பீ குலசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இறுதி உரையை நிகழ்த்தினார்.
கட்டளை அதிகாரி, தலைமை பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.