20th September 2025
இலங்கைக்கான அமெரிக்க தூதர் அதிமேதகு ஜூலி சுங், 2025 செப்டம்பர் 19 அன்று இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரிக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த அவரை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ் மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அன்புடன் வரவேற்றார்.
இந்த விஜயத்தின் போது, தூதர் கல்வியற் கல்லூரியின் பல முக்கிய வசதிகளைப் பார்வையிட்டதுடன் அதைத் தொடர்ந்து பயிலளவல் அதிகாரிகள் உணவகத்தில் தேநீர் விருந்துபசாரம் நடைப்பெற்றதுடன் அங்கு அவர் பயிலளவல் அதிகாரிகள் மற்றும் கல்லூரி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், தளபதி தூதருக்கு ஒரு நினைவுப் பரிசை வழங்கினார். இதற்கு ஈடாக, அவர் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி நூலகத்திற்கு இரண்டு மதிப்புமிக்க புத்தகங்களை நன்கொடையாக வழங்கியதுடன் இது எதிர்கால இராணுவத் தலைவர்களின் கல்வி வளத்திற்கு பங்களிக்கும்.