ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப்பில் இராணுவ வீரர்களுக்கு வெள்ளிப் பதக்கம்

2026 மே 03 ஆம் திகதி கொரியா மொக்போவில் நடைபெற்ற ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் அதிகாவாணையற்ற அதிகாரி 1 எச்.எல்.என்.டி. லேகம்கே மற்றும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கோப்ரல் ஆர்.ஏ.எஸ்.ஜே. ரணசிங்க ஆகியோர் மகளிர் மற்றும் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

அதிகாவாணையற்ற அதிகாரி 1 எச்.எல்.என்.டி. லேகம்கே, இந்தப் போட்டியில் சிறப்பாக செயற்பட்டு 56.79 மீட்டர் எறிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அத்துடன், கோப்ரல் ஆர்.ஏ.எஸ்.ஜே. ரணசிங்க, இந்தப் போட்டியில் தனது சிறந்த செயற்பாட்டை வெளிப்டுத்தி 76.95 மீட்டர் எறிந்து அவரும் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.