23rd July 2025
இலங்கை கராத்தே சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 9 வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2025 ஜூலை 05 மற்றும் 06 ம் திகதிகளில் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
தேசிய கராத்தே அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 09 இராணுவ தடகள வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்று, சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி 02 தங்கப் பதக்கங்கள், 02 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 01 வெண்கலப் பதக்கத்தை பெற்றனர்.
இராணுவ கராத்தே குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஆர்.டி. சல்லே என்டிசீ அவர்களின் முழு மேற்பார்வையின் கீழ் விளையாட்டு வீரர்கள் போட்டியிட்டனர்.