27th September 2025
இலங்கை இராணுவத்தின் 76வது ஆண்டு விழா மற்றும் இராணுவ தினத்தை முன்னிட்டு இந்து பாரம்பரியத்தின் விஷேட ஆசீர்வாத பூஜை 2025 செப்டம்பர் 26 அன்று வவுனியா கந்தசாமி கோவிலில் நடைபெற்றது.
இலங்கை இராணுவ இந்து சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜையில் இராணுவக் கொடி கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் இந்து சமூகத்தின் கலாச்சார, மத மற்றும் சமூக விழுமியங்களை மதித்து, தூய இலங்கை தேசிய திட்டத்தின் கருத்துக்களைக் கடைப்பிடித்து, இராணுவக் கொடிகளுக்கான இந்து தெய்வ ஆசீர்வாத விழா இம் முறை வவுனியாவில் நடைபெற்றது.
வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் இந்து சமூகத்தின் கலாச்சார, மத மற்றும் சமூக விழுமியங்களை மதித்து, தூய இலங்கை தேசிய திட்டத்தின் கருத்துக்களைக் கடைப்பிடித்து, இராணுவக் கொடிகளுக்கான இந்து தெய்வ ஆசீர்வாத விழா இம் முறை வவுனியாவில் நடைபெற்றது.
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இராணுவ இந்து சங்கத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை இந்து மரபுகளுக்கமையக நாதஸ்வர மேள தாள வாத்தியங்களுடன் வரவேற்றார்.
ஆலய மணிகள் ஒலிக்கத் தொடங்கியதும் தளபதி இராணுவக் கொடியை ஆலய பிரதம குருக்களிடம் ஆசீர்வாதத்திற்காக கையளித்தார். அதனைத் தொடர்ந்து, ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ சர்வேஸ்வர குருக்கள் தலைமையில் பூஜை நடைபெற்றது.
இராணுவ தளபதி அவர்கள் மத அனுஷ்டானத்திற்கு பின்னர், கோவிலின் திருப்பணிக்காக ஆலய அறங்காவல் சபை பொருளாளர் திரு. அருள் செல்வம் அவர்களிடம் அனைத்து இராணுவத்தினர் சார்பாக நிதி நன்கொடை வழங்கினார்.
இந் நிகழ்வில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, முதன்மை பணிநிலை அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.