26th September 2025
அக்டோபர் 10 ஆம் திகதி இராணுவ தினம் மற்றும் 76 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் இராணுவக் கொடி ஆசிர்வாத விழா, இன்று (26) காலை புனித அநுராதபுரம் புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.
மரபுகளுக்கு இணங்க இராணுவத் தளபதி முதலில் எட்டு வழிபாட்டுத் தலங்களுக்குமான (அடமஸ்தந்திபதி) பிரதம தேரர் அதி வண. கலாநிதி பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரர் அவர்களை வணங்கி ஆசி பெற்றார்.
இந் நிகழ்வில் ருவன்வெலி மகா சேயவின் பிரதம விகாராதிபதி அதி வண. இத்தல வடுனு வேவ ஞானதிலக மகா தேரர், பன்சில் பாராயணம் செய்ததுடன் லங்காராம ரஜமஹா விகாரையின் பிரதம தேரர் அதி வண. ரலபனாவே தம்மஜோதி தேரர் அவர்களினால் இராணுவத்தின் தேசத்திற்கான பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி ஆற்றப்பட்ட விசேட தர்ம 'அனுஷாசன' சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
மத அனுஷ்டானங்களின் பின்னர், இராணுவத் தளபதியின் 76வது இராணுவ ஆண்டு நிறைவுச் செய்தியை இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களினால் வாசிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, முதன்மை பணிநிலை அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.