2nd October 2025
எதிர்வரும் 76 வது இராணுவ ஆண்டு தினத்தை முன்னிட்டு சர்வமத அனுஷ்டானங்களின் ஒரு பகுதியாக, கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் 2025 ஒக்டோபர் 02 ஆம் திகதி விசேட பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார். வருகை தந்த அவரை இலங்கை இராணுவ முஸ்லிம் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் டி.என் மஜீத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஐஎஸ்சீ அவர்களும், கொள்ளுபிட்டி ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர்களும் இணைந்து வரவேற்றனர். பிரதம மௌலவிகளான ரிஸ்வான் மற்றும் ஷேக் ஹுஸ்ரைன் நௌபர் மௌலவி ஆகியோர் பிரார்த்தனை மேற்கொண்டார்.
இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, முதன்மை பணிநிலை அதிகாரிகள், இலங்கை இராணுவ முஸ்லிம் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டனர்.