8th October 2025
இலங்கை இராணுவத்தின் 76 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பனாகொடை ஸ்ரீ மஹா போதிராஜராமய விகாரையில் இரவு முழுவதும் 'பிரித்' பாராயண நிகழ்வு ஒக்டோபர் 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களுடன் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
கங்காராமய விகாரையின் பிரதம விகாராதிபதி வண. கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் சமய நிகழ்வில் முக்கிய பங்கு வகித்தார். ரத்னமாலி விகாரையின் பிரதம விகாராதிபதி வண. ஈதலவெடுனவேவே ஞானதிலக்க தேரருடன் இணைந்து இலங்கை இராணுவம் தேசத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ததற்காகவும், அதன் தொடர்ச்சியான வெற்றிக்காக ஆசீர்வாதங்கள் தெரிவித்து, சொற்பொழிவு நிகழ்த்தினார். 2025 ஒக்டோபர் 07 ஆம் திகதி காலை வண. மகா சங்கத்தினருக்கு 'அன்ன தானம்' வழங்கலுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இந்நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, இராணுவத்தின் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் பௌத்த சங்கத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் வீரமரணமடைந்த போர் வீரர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.