76 வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஸ்ரீ தலதா மாளிகையில் இராணுவத்தின் கொடிகளுக்கு ஆசிர்வாதம்

நடைபெறவுள்ள இராணுவத்தின் 76 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு (ஒக்டோபர் 10) இரண்டாவது பௌத்த மத நிகழ்வு 2025 ஒக்டோபர் 28 அன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்றது. மாளிகை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும், இராணுவத்தின் அனைவரின் சார்பாகவும் வணக்கத்திற்குரிய இந்த புனித தலத்தின் அபிவிருத்திக்காக ஸ்ரீ தலதா மாளிகையின் நிர்வாகச் செயலாளர் திரு. டப்ளியூ.எம்.ஜீ அனுர பண்டார அவர்களிடம் இராணுவத் தளபதி நிதி நன்கொடையை வழங்கினார்.

பின்னர், இராணுவத் தளபதி அஸ்கிரிய பீடத்தின் பதில் பிரதம பீடாதிபதி வண. நாரம்பனாவே ஆனந்த தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

இந் நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, முதன்மை பணிநிலை அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.