76 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சம்பிரதாயங்களுக்கமைய வீரர்களுக்கு நினைவேந்தல்

76 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு 2025 ஒக்டோபர் 08 ஆம் திகதி பத்தரமுல்ல போர்வீரர்கள் நினைவுத்தூபியில் வீரமரணமடைந்த போர்வீரர்களின் மகத்தான தியாகங்களை கௌரவிக்கும் வகையில் ஒரு கௌரவ விழா நடைபெற்றது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இராணுவத் தளபதியின் வருகையின் பின்னர், தேசிய கீதம் மற்றும் இராணுவ பாடல் ஒலிக்கப்பட்டதை தொடர்ந்து உயிர்நீத்த போர் வீரர்களை கௌரவிக்கும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அன்றைய பிரதம அதிதி, பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து, போர்வீரர்களின் நினைவுத் தூபிக்குச் சென்று தேசத்திற்காக உயிர்நீத்த போர் வீரர்களின் நினைவு தூபிக்கு மலர் வளையம் வைத்து வணக்கம் செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து, இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க, போர் வீரர்களின் நினைவைப் போற்றும் இராணுவத்தின் இறுதி பியுகல் மற்றும் 'ரெவில்' வாசிக்கப்பட்டதுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏபி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, முதன்மை பணி நிலை அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கலந்து கொண்டனர்.