6வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி – 2026-ல் இராணுவ வீரர்களின் திறமைகள்

சீனா சான்யாவில் 2026 ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெற்ற 6வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் – 2026 இல் இலங்கை இராணுவ வீரர்கள் அபாரமான திறமைகளை வெளிப்படுத்தினர். இராணுவ தடகளக் குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

இப்போட்டியின் போது இராணுவ வீரர்கள் பல குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்தனர்.

8வது இலங்கை இராணுவ சேவை படையணியின் சிப்பாய் ஐ.எஸ்.டபிள்யூ. ஆராச்சி நீளம் பாய்தலில் 2ம் இடம்.

2வது (தொ) இலங்கை மின்சார மற்றும் இயந்திரப் பொறியியல் படையணியின் சிப்பாய் ஜே.எஸ். மிரந்த நீளம் பாய்தலில் 3ம் இடம்.

7வது கெமுனு ஹேவா படையணியின் லான்ஸ் கோப்ரல் டி.டி.எஸ். தியலாவத்த ஆண் 4 × 60 மீ அஞ்சல் ஓட்டத்தில் 3ம் இடம்.

1வது இலங்கை இராணுவ சேவை படையணியின் லான்ஸ் கோப்ரல் என்.எம்.பீ.பீ. சில்வா ஆண் 4 × 60 மீ அஞ்சல் ஓட்டத்தில் 3ம் இடம்.

இலங்கை இராணுவ சேவை படையணியின் 2வது (தொ) படையணியின் சிப்பாய் டபிள்யூ.எம்.கே. த மெல், ஆண் 4 × 60 மீ அஞ்சல் ஓட்டத்தில் 3ம் இடம்.

(புகைப்படங்கள்: www.sporty.lk)