61 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் டபிள்யூஎஸ்வீ பெர்னாண்டோ யூஎஸ்பீ என்டிசீ ஐஜீ அவர்கள் 61 வது காலாட் படைப்பிரிவின் 21 வது படைபிரிவு தளபதியாக 2025 ஜூலை 01 அன்று பூசாவில் உள்ள 61 வது காலாட் படைப்பிரிவின் தலைமையகத்தில் முறையான இராணுவ சம்பிரதாயத்திற்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், அவர் மரக்கன்று நட்டு, குழு படம் எடுத்துகொண்டார். படையினருக்கு உரையாற்றினார். தொடர்ந்து அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.