21st August 2025
60 வது இலங்கை இராணுவ தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2025 ஆகஸ்ட் 20ஆம் திகதி தியகம மகிந்த ராஜபக்ச மைதானத்தில் நிறைவுற்றது.
இறுதி நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
வருகை தந்த இராணுவத் தளபதியை, இராணுவ தடகளக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் பிஜீஎஸ் பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். நிறைவு விழா ஆரம்பிக்கும் முன், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் இராணுவ தடகளக் குழுவின் தலைவர் வரவேற்புரை நிகழ்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“நிறைவு விழாவின் போது ஆண்கள் 100 மீட்டர், பெண்கள் 100 மீட்டர், ஆண்கள் 1500 மீட்டர், ஆண்கள் 4x400 மீட்டர் மற்றும் பெண்கள் ஓட்டம் மற்றும் 4x400 மீட்டர் அஞ்சல் ஓட்டம் ஆகியவற்றின் இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தப் போட்டியில் இராணுவ விளையாட்டு வீரர்கள் சிறப்பான வெற்றியைப் பெற்று, ஒரு தேசிய சாதனையும், புதிய இராணுவ தடகளச் சாதனையும், 11 புதிய போட்டி சாதனைகளையும் படைத்தனர். ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிப்பாய் கே. புவிதரன் 5.18 மீட்டர் உயரம் தாண்டி தேசிய சாதனை படைத்தார்.
புதிய சாதனைகளுடனான நிகழ்வுகள்: 100 மீ ஆண்கள் - 10.34 வினாடிகள், 800 மீ ஆண்கள் – 1:48.87 வினாடிகள், 400 மீ தடை தாண்டல் ஓட்டம் – 51.36 வினாடிகள், கோல்ஊன்றி பாய்தல் - 5.18 மீ. ஈட்டி எறிதல் - 79.49 மீ., டெகாத்லான் – 7044 புள்ளிகள், 400 மீ பெண்கள் - 52.86 வினாடிகள், நீளம் பாய்தல் பெண்கள் - 6.20 மீ., 4×100 மீ பெண்கள் – 46.82 வினாடிகள், 4×800 மீ பெண்கள் – 09:05.50 வினாடிகள், 4×1500மீ பெண்கள் – 19:24.78
போட்டி நிறைவில், இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து சாதனையாளர்களுக்கு பதக்கங்களும் கிண்ணங்களும் வழங்கினார்.
பின்வரும் சாதனையாளர்களுக்கு சிறப்பு கிண்ணங்கள் வழங்கப்பட்டன:
படையணிகளுக்கான சம்பியன் கிண்ணம் (பெண்கள்) படையணிகளுக்கிடையிலான சவால் கிண்ணம் - இலங்கை இராணுவ மகளிர் படை (257 புள்ளிகள்)
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சிறந்த இரண்டாம் இடத்தைப் பிடித்த படையணிக்கான (பெண்கள்) படையணிகளுக்கிடையிலான சவால் கிண்ணம் (212 புள்ளிகள்)
படையணிகளுக்கான சம்பியன் கிண்ணம் (ஆண்கள்) - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி ஒட்டுமொத்த சாம்பியன் சவால் கிண்ணம் (272 புள்ளிகள்)
இரண்டாம் இடம் படையணிகளுக்கான (ஆண்கள்) படையணிகளுக்கிடையிலான சவால் கிண்ணம் - இலங்கை பீரங்கிப் படையணி (198 புள்ளிகள்)
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ஏராளமான பார்வையாளர்கள் இந் நிகழ்வைக் கண்டுகளித்தனர்.