59 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் எச்.ஏ.ஐ. பெரேரா ஆர்டபிளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 2026 மே 15 ஆம் திகதி 59 வது காலாட் படைப்பிரிவின் 25வது தளபதியாக படைப்பிரிவு வளாகத்தில் கடமை பொறுப்பேற்றார்.

வருகை தந்த புதிய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையில் மரியாதை வழங்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், அவர் படைப்பிரிவு வளாகத்தில் ஒரு மரக்கன்றை நாட்டியதுடன், படையினருக்கு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அனைத்துத் நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.