2026-05-23

58 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் டி.எஸ். ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் 2026 மே 19 அன்று 58 வது காலாட் படைப்பிரிவின் 23 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.


வருகை தந்த படைப்பிரிவின் புதிய தளபதிக்கு 6 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதன்பிறகு, அவர் குழு படம், மரக்கன்று நாட்டல், படைவீரர்களுக்கு உரையாற்றல் என்பவற்றினை தொடர்ந்து அனைத்துத் நிலையினருக்குமான தேநீர் விருந்தில் கலந்துகொண்டார்.


இந்நிகழ்வில சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.