18th July 2025
58 வது காலாட் படைப்பிரிவின் 16 வது ஆண்டு நிறைவை மத மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேயவர்தன டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 ஜூலை 02 அன்று பிரிவு தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது.
இராணுவ மரபுகளுக்கமைய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் அதைத் தொடர்ந்து அனைத்து நிலையினருக்கான மதிய உணவும் வழங்கப்பட்டது.
ஆண்டு விழா கொண்டாட்டங்களுக்கு இணங்க, ஷாலோர்ன் சிறுவர் இல்லத்தின் பிள்ளைகளுக்கு உணவு வழங்கல் மற்றும் போதி பூஜை நிகழ்ச்சி படைப்பிரிவால் நடத்தப்பட்டது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.