55 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி பதவியேற்பு

மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.ஏ.பி. விஜேகோன் யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 55 வது காலாட் படைப்பிரிவின் 29 வது தளபதியாக 2025 ஜூலை 01 ஆம் திகதி இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.

கடமை பொறுப்பேற்றதன் பின்னர் அவர் படையினருக்கு உரையாற்றியதுடன், அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.