54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் ஏஎம்சீ அபேகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 2025 ஜூன் 29 அன்று மன்னார் 54 வது படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 54 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.

அன்றைய தினத்தை நினைவுகூரும் வகையில், புதிய படைப்பிரிவு தளபதி குழு படம் எடுத்துகொண்டார். அதன் பின்னர் மரக்கன்று நாட்டியதுடன் படையினருக்கு உரையாற்றினார், பின்னர் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.