17th July 2025
53 வது காலாட் படைப்பிரிவின் (அவசர கால தாக்குதல் படை) கட்டளையின் கீழுள்ள படையலகுகளின் சிறப்பாக பயிற்சி பெற்ற பிரிவு, 2025 ஜூலை 14, தொடக்கம் 2025 ஜூலை 18 வரை அம்பு முனை சவால் 2025 - போர் தயார்நிலை போட்டியில் போட்டியிடுகிறது.
பணி திட்டமிடல், தலைமைத்துவ முன்னேற்றம் மற்றும் போர் உருவகப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் தீவிர போட்டிக்கு முந்தைய பயிற்சிக்குப் பின்னர், அணிகள் விரிவான உள் மதிப்பீட்டைத் தொடர்ந்து காலாட் படை பயிற்சி நிலையம் (மின்னேரியா) தங்கள் பதிவை நிறைவு செய்தன. 2025 ஜூலை 13, அன்று படையலகு மட்டத்தில் நடத்தப்பட்ட இந்த மதிப்பீட்டில், உடற்பயிற்சி மதிப்பீடுகள், துப்பாக்கி சூட்டு திறன் பதிவுகள் மற்றும் போர் தயார்நிலை அறிக்கைகள் போன்றவை அடங்கும்.
செயல்பாட்டு செயல்திறன் மற்றும் தலைமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில், முதலாம் படை மற்றும் 53வது காலாட் படைபிரிவின் வழிகாட்டுதலின் கீழ் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான அம்பு முனை சவால் போர் தயார்நிலை காடுகளுக்கான போட்டியில் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்தப் போட்டி 53 வது காலாட் படைப்பிரிவின் (அவசர கால தாக்குதல் படை) பங்கேற்கும் அனைத்து அணிகளாலும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. இபோட்டியின் ஆரம்பப் பிரிவு, ஹபரன அடர்ந்த காட்டுப் பகுதி வழியாக 12 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தை கடந்து, காலாட் படைவீரர்களின் உடல் சகிப்புத்தன்மை, தந்திரோபாய சுறுசுறுப்பு மற்றும் குழுப்பணியை வலுபடுத்துவதாகும்.
2025 ஜூலை 14, அன்று அதிகாலையில் வன அப்பியாசம் ஆரம்பமாகியதுடன் அங்கு அணிகள் இயற்கையான தடைகள் மற்றும் செங்குத்தான சரிவுகளைக் கடந்து பாதகமான வறண்ட வானிலையிலும், மிகக் குறைந்த நீர் வளங்களுடன் பயணிக்க வேண்டியிருந்தது. இந்தப் போட்டியின் முதல் கட்டம், சோர்வு நிலையிலும் முன்னேறும் திறன்கள் மற்றும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதாகும்.
அம்பு முனை சவால் 2025 இன் இரண்டாவது நாள் 2025 ஜூலை 15 அன்று தொடங்கியது. பங்கேற்பாளர்கள் தாக்குதல் ரோந்து, பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துதல், கண்காணிப்பு, உடனடி நடவடிக்கை பயிற்சிகள் மற்றும் ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளங்களைத் தேர்ந்தெடுத்து பாதுகாத்தல் உள்ளிட்ட தொடர்ச்சியான கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டனர். அன்றைய சவால்கள் நுணுக்கமான ஹெலிகாப்டர் மார்ஷலிங் பயிற்சிகளுடன் உச்சத்தை அடைந்தன. ஒரு நாள் தீவிர சோதனைகளுக்குப் பிறகு, படையினர் ஒரு தந்திரோபாய துறைமுகத்தை வெற்றிகரமாக ஆக்கிரமித்து வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படும் புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ள மூலோபாய ரீதியாக தங்களை மறுசீரமைத்துக் கொண்டன.
2025 ஜூலை 16 ஆம் திகதி நடைபெற்ற அம்பு முனை சவால் போட்டியின் இறுதிக் கட்டம், 53 வது படைப்பிரிவின் பங்கேற்கும் அனைத்து அணிகளின் சகிப்புத்தன்மை மற்றும் உறுதியை வெளிப்படுத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையுடன் நிறைவடைந்தது.
முழு நிகழ்விலும் சவாலான பணியுடன், 8 பேர் கொண்ட குழுக்களால் கடுமையான வெப்பத்திலும், கரடுமுரடான நிலப்பரப்பிலும் 20 கி.மீ. விபத்துக்குள்ளானவர்களை வெளியேற்றுதல் பணியுடன் காலை 0530 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த சாதனை ஒரு புதிய மைல்கல்லை குறிப்பதுடன், இலங்கை இராணுவ பயிற்சி வரலாற்றில் ஒரு குழுவால் மேற்கொள்ளப்பட்ட அதிக விபத்துக்குள்ளானவர்களை வெளியேற்றுதல் பணியாக இது காணப்படுகிற்து.
இதைத் தொடர்ந்து, காலாட் படை பயிற்சி நிலையத்தின் துப்பாக்கிச் சூட்டு தளத்தில் முழு எப்எஸ்எம்ஓ வில் நேரடி போர் துப்பாக்கிச் சூட்டு பயிற்சியில் குழுக்கள் ஈடுபட்டன.
2025 ஆம் ஆண்டுக்கான அம்பு முனை சவால் வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது, அவசர கால தாக்குதல் படையின் உடல் உறுதி, தந்திரோபாய சிறப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையை எடுத்துக்காட்டுகிறது.
2025 ஜூலை 17 ஆம் திகதி அம்பு முனை போட்டிக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. முதலாம் படை தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
போட்டி பிரிவில், 6190 புள்ளிகளில் 5258 புள்ளிகளைப் பெற்று முதலாவது கஜபா படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றுகொண்டனர்.
6190 புள்ளிகளில் 5423.5 என்ற புள்ளிகளைப் பெற்று 3 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி 2025 ஆம் ஆண்டுக்கான அம்பு முனை போட்டிக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை பெருமையுடன் வென்றது. வெற்றியாளர்களுக்கு அவர்களின் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக சிறப்புச் சான்றிதழ், பெறுமதியான சவால் கேடயம், பதக்கங்கள் மற்றும் சிறப்பு பணப் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.