27th October 2025
இந்தியாவின் ராஞ்சியில் 2025 ஒக்டோபர் 25 ஆம் திகதி நடைபெற்ற 4வது தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி பல பதக்கங்களை வென்று நாட்டிற்கும் இராணுவத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
மொத்தம், இராணுவ விளையாட்டு வீரர்கள் 12 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இந்த நிகழ்வின் போது இராணுவ விளையாட்டு வீரர்களின் செயல்திறன் பின்வருமாறு:
• அதிகாரவாணையற்ற அதிகாரி II எச்.கே.கே. குமாரகே – 400 மீ (தங்க பதக்கம்), 400 மீ x 4 (தங்க பதக்கம்), 400 மீ x 4 (கலப்பு) (வெள்ளிப் பதக்கம்).
• அதிகாரவாணையற்ற அதிகாரி II எச்.எல்.என்.டி. லேக்கம்கே – ஈட்டி எறிதல் (தங்கப் பதக்கம்) – 60.14 மீ தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனையைப் படைத்தார்.
• பணிநிலை சார்ஜன் ஆர். நதீஷா – 400 மீ x 4 (வெள்ளிப் பதக்கம்), 400 மீx 4 (கலப்பு) (வெள்ளிப் பதக்கம்)
• சார்ஜன் டபிள்யூ.எல். சுகந்தி – 100 மீ தடை தாண்டல் ஓட்டம் (வெண்கலப் பதக்கம்)
• பொம்படியர் கே.கே.டி.என். தர்மசேன - சம்மட்டி எறிதல் (வெண்கலப் பதக்கம்)
• பொம்படியர் எஸ்.ஏ.டீ. தசுன் - உயரம் பாய்தல் (தங்கப் பதக்கம்)
• கோப்ரல் ஜி.ஆர். சத்துரங்க – 1500 மீ (வெள்ளிப் பதக்கம்)
• கோப்ரல் டபிள்யூ.டி.எம்.எம்.எஸ். திசாநாயக்க – தட்டு எறிதல் (வெண்கலப் பதக்கம்)
• கோப்ரல் ஆர்.எம்.எஸ்.ஜே. ரணசிங்க – ஈட்டி எறிதல் (வெள்ளிப் பதக்கம்)
• கோப்ரல் ஆர்.ஆர்.டி. ரணதுங்க – 100 மீ தடை தாண்டல் ஓட்டம் (வெள்ளிப் பதக்கம்)
• லான்ஸ் கோப்ரல் டி.டீ.ஏ. டி சில்வா – 100 மீ (வெள்ளிப் பதக்கம்), 100 மீ x 4 (தங்கப் பதக்கம்) – 44.70 வினாடிகளில் ஓடி புதிய போட்டி சாதனையைப் படைத்தார்.
• லான்ஸ் கோப்ரல் எம்.வை.எப். சபியா – 100 மீ (தங்கப் பதக்கம்) - "தெற்காசியாவின் வேகமான பெண்" என்ற புதிய சாதனையைப் படைத்தார், 11.53 வினாடிகள், 100 மீ x 4 (தங்கப் பதக்கம்) - புதிய போட்டி சாதனையைப் படைத்தார், 44.70 வினாடிகள், 200 மீ (தங்கப் பதக்கம்) - புதிய போட்டி சாதனையைப் படைத்தார், 23.58 வினாடிகள்.
• லான்ஸ் கோப்ரல் வீ. வக்சன் – 5000 மீ (வெள்ளிப் பதக்கம்)
• லான்ஸ் கோப்ரல் டி.எம்.எச்.எஸ். கருணாரத்ன - 800 மீ (தங்கப் பதக்கம்)
• லான்ஸ் கோப்ரல் வை.சி.எம். யோதசிங்க – 100 மீ (தங்கப் பதக்கம்) – "தெற்காசியாவின் வேகமான ஆண்" என்ற புதிய சாதனையைப் படைத்தார், 10.30 வினாடிகள், 100 மீ x 4 (தங்கப் பதக்கம்)
• காலாட் சிப்பாய் டி.டி.எஸ்.தியலவத்த – 100 மீ x 4 (தங்கப் பதக்கம்)
• சிப்பாய் என்.எம்.பீ.பீ. சில்வா – 100 மீ x 4 (தங்கப் பதக்கம்)
• சிப்பாய் கே.ஏ.பீ. மல்ஷன் – முப்பாய்ச்சல் (தங்கப் பதக்கம்)
• சிப்பாய் ஆர்.பீ. கமகே – உயரம் பாய்தல் (வெள்ளிப் பதக்கம்)
• சிப்பாய் ஆர்.எம். நிப்ரான் – 1500 மீ (வெண்கலப் பதக்கம்)
• சிப்பாய் டபிள்யூ.ஏ.எம்.ஆர். விஜேசூரிய – 10000 மீ (தங்கப் பதக்கம்)
• சிப்பாய் எஸ்.கே. மிதுராஜ் – குண்டு போடுதல் (வெண்கலப் பதக்கம்)
• சிப்பாய் கே.கே.ஐ. சில்வா – 400 மீ x 4 (கலப்பு) (வெள்ளிப் பதக்கம்), 400 மீ x 4 (தங்கப் பதக்கம்), 400 மீ (வெண்கலப் பதக்கம்)
• சிப்பாய் இ.எம்.எஸ். உபேக்ஷா - முப்பாய்ச்சல் (வெண்கலப் பதக்கம்)