2nd September 2025
27 வது வருடாந்த இந்து-பசிபிக் பாதுகாப்புத் தலைவர்கள் மாநாடு - 2025, தாய்லாந்தில் 2025 ஆகஸ்ட் 25 முதல் 28 வரை நடைபெற்றது. இதில் 29 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட இராணுவத் தலைவர்கள் பங்கேற்றனர். இலங்கையிலிருந்து சீருடை அணிந்த பாதுகாப்புத் தலைமை பிரதிநிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.
"வலிமை மூலம் அமைதி" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பாதுகாப்பு மற்றும் இராணுவக் களங்களுக்கு அப்பால் பரந்த அளவிலான முன்னோக்குகளை வழங்கிய பேச்சாளர்கள், பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்கொள்வது பற்றிய உரையாடல் மற்றும் மாறுபட்ட அணுகுமுறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, இராணுவத் தளபதி, இராணுவ-இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல் குறித்து நட்பு நாடுகளின் பல சிரேஷ்ட இராணுவத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.