22nd September 2025
221 வது காலாட் பிரிகேட்டின் கீழ் இயங்கும் 2 வது (தொ) கஜபா படையணியினரால் 2025 செப்டம்பர் 17, அன்று திருகோணமலை தி/சங்கமய ஆரம்ப பாடசாலையில் மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பாடசாலை பொருட்கள் நன்கொடையாக வழங்கும் திட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டது.
கனடாவைச் சேர்ந்த திரு. இன்பநாதன் சசிகுமார் மற்றும் குடும்பத்தினர், இலங்கையைச் சேர்ந்த திரு. சமிலா சமரஜீவ ஆகியோரால் வழங்கப்பட்ட நிதியுதவி மூலம் இந்த நன்கொடை திட்டம் சாத்தியமானது.
221வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஈடபிள்யூஆர்எஸ்பி எஹெலேபொல யூஎஸ்பீ யூஎஸ்ஏசீஜீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.